பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக மலேசியா துணை நிற்கும்: பிரதமர்

Date:

பலஸ்தீன மக்களின் போராட்டங்களுக்கு மலேசியா தொடர்ந்து துணை நிற்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடுமை, அடக்குமுறை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை  பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த அநீதியின் விளைவாக, நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பலியாகியுள்ளன என்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காசா பகுதியில் தற்போதைய வன்முறைக்கான மூல காரணங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பலஸ்தீனியர்களுக்குரிய இடங்களை நீண்டகால சட்டவிரோத ஆக்கிரமிப்பு, முற்றுகை, துன்பம், அல்-அக்ஸாவை இழிவுபடுத்துதல் என்று பலவிதங்களில் ஆக்கிரமிப்பாளராக இஸ்ரேல் செயலாற்றி வருவதை சொல்லி மாளாது.

இஸ்ரேல் தங்கள் அரசியலுக்காக பலஸ்தீனர்களை பலியாக்கி வருகின்றது என்று வெளியுறவு அமைச்சகம்  ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில், மேலும் உயிரிழப்புகள், துன்பங்கள்,  அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மத்திய கிழக்கின் சமீபத்திய வன்முறைகள் குறித்து மலேசியா கவலைப்படுகிறது.

சர்வதேச அமைதி, பாதுகாப்பைப் பேணுவதற்கான அதன் சாசனம், கட்டாயமான பொறுப்பின்படி செயல்படுமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை மலேசியா வலியுறுத்துகிறது என்று பிரதமர் கூறினார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...