பாராளுமன்றத் தேர்தல் முறை திருத்தம்: கட்சித் தலைவர்களுடன் விரைவில் கலந்துரையாடல்!

Date:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் தேர்தல் முறைமை திருத்தம் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, இது எனது நோக்கமல்ல. அரசாங்கத்தினதும் நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பாகுமென தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கான யோசனையை நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்ததுடன், இதனால் நாட்டில் பல்வேறு கருத்தாடல்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், ​​160 உறுப்பினர்களை தொகுதிவாரி முறையிலும் எஞ்சிய 65 உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் தெரிவு செய்வதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்றக் குழு ஒற்றை அமைப்பதற்கும் இந்த யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களது யோசனைகளையும் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...