புனித பூமியில் வேதனை தான் வாழ்க்கை; விடியலை தேடும் ஆன்மாக்களின் முயற்சி!

Date:

முஹம்மத் பகீஹுத்தீன்

ஆண்டாண்டு காலமாக நடக்கும் இஸ்ரேல், பாலஸ்தீன சண்டை ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு விதமாக நீடிக்கிறது. கொடிய மரணங்களையும், மிகக்கொடூரமான வாழ்வியல் சூழலையும் ஏற்படுத்துகிறது. இதுகுறித்து பாலஸ்தீன மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் விவரிக்கும் ஒரு சிறப்பு கட்டுரையை வாசர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

புனித பூமியில் வேதனை தான் வாழ்க்கையாக உள்ளது. ஆனாலும் மரணம் முற்றுப்புள்ளி அல்ல.

நாலு பக்கம் மூடப்பட்டுள்ள காஸா நிலம் ஒரு திறந்த சிறைச்சாலை. உண்மையில் சிறைச்சாலை எவ்வளவோ நல்லம்.

காஸா மனிதப் பேரவலம் வாழும் குருதிப்புனல். நீரில்லை, மின்சாரம் இல்லை. மருந்து மருந்துக்கும் இல்லை. தற்போது வைத்தியசாலகளும் இல்லை. பள்ளிக்கூடமும் இல்லை பள்ளிவாசல்களும் இல்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இல்லை என்றால் இல்லை. ஒன்றும் இல்லை.

என்ன உண்டு? வாழ்க்கை இல்லை, மரணம் உண்டு. கோழைத்தனம் இல்லை வீரம் உண்டு. அமைதி இல்லை, உள்ளத்தில் நிம்மதி உண்டு. சலனம் இல்லை, நம்பிக்கை உண்டு. உணர்வுகள் உண்டு. உறுதி உண்டு. மறுமை நம்பிக்கை உண்டு. நீதி கிடைக்கும் என்ற ஈமான் உண்டு. சத்தியம் வெல்லும் என்ற அசையாத கொள்கை உண்டு.

70 வருடங்கள் கடந்தும் தாயகம் காத்து நிற்கும் வீரர்கள் அவர்கள். உம்மத்தின் அடையாளம் காக்கும் நேசர்கள். அனைத்தையும் இழந்தும் ஈமானை இழக்க வில்லை. நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு. வாழ்கிறார்கள். சாதிக்கிறார்கள்.

20 நிமிடம் 5000 ராக்கெட்டுகள் பாய்ந்து சென்று தாக்கின. இனி என்ன சாதித்துவிட்டார்கள் என்பதே எல்லோரும் கேட்கும் கேள்வி.

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இது எப்படி நடந்தது! அதுவே ஒரு இமாலயச் சாதனை.

இதுவரை 1500 க்கும் மேற்பட்ட சீயோனிச ஆக்கிரமிப்பாளர்கள் இறந்துள்ளனர். பூச்சி புழுக்கள் கூட நுழைய முடியாத வான் பரப்பு என்று இறுமாப்புடன் இருந்த இருதயத்தில் இன்று வெடிப்பு.

புனித பூமியை அசிங்கப்படுத்திய 5000 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

நான்கு பக்கமும் மூடப்பட்ட பூமியில் வாழும் விடுதலைப் போராளிகள் 200 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். அதில் சுமார் ஐம்பது பேர் ராணுவ அதிகாரிகள், மேலும் ஐம்பது பேர் சிப்பாய்கள், ஏனையவர்கள் தேவையின் போது அழைக்கப்படுவர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் வெடிக்கும் போது அநியாயக்கார்கள் தாங்க மாட்டார்கள்.

மீட்புப் போர் தொடங்கி இரண்டு வார காலத்திற்குள் ஆக்கிரமிப்பு தேசத்தின் பணப் பெறுமதி 30% க்கும் அதிகமாக குறைந்துள்ளது. மரணங்கள் வாழும் பூமியின் பிரமிக்கத்தக்க சாதனைகள்.

இஸ்ரேலின் சுற்றுலாத் துறை வீழ்ந்துள்ளது. கிட்டிய எதிர் காலத்தில் எழும்புவதற்கான சாத்தியம் தெரியவில்லை.

அஸ்கான், சைடெரோட் ஆகிய இரண்டு யூத குடியேற்ற பகுதிகளிலும் உள்ள 68 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நெத்தன்யாகுவின் மூர்க்கத்தனமான அணுகுமுறை குறித்து கடும் சின்னத்தோடு வெளியாகியுள்ள குடியேற்றவாசிகள் இனியும் திரும்பி வருவது கேள்விக் குறியாகவே உள்ளது.

1973 முதல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல், உண்மையான போரை நடத்தியதாக வரலாறு இல்லை.

மனிதப் பேரவலங்களையே நடத்தி வந்த இஸ்ரேலும் குறிப்பாக அதன் இராணுவமும் தற்போது பாரிய உளவியல் தோல்வி கண்டுள்ளது. ஈமானிய பலத்துக்கு முன்னாள் வேறென்ன தான் காண முடியும்.

பலஸ்தீன விவகாரம் குறித்து யாரும் அலட்டிக் கொள்வதில்லை. குத்ஸ் கதறி அழுவதை எவரும் கண்டு கொள்ள வில்லை. அல் அக்ஸா இடிக்கப்பட்டு வந்ததை யாரும் பேசவில்லை. ஆறு மில்லியன் பாலஸ்தீனிய அகதிகள் பற்றி கதைக்க 70 வரும் சென்றும் யாருக்கும் துணிவு வரவில்லை. ஒக்டோபர் 7 வாங்கிய அடி பாலஸ்தீன் விவகாரத்தை பேசு பொருளாக்கியுள்ளது. அது நிகழ்ச்சி நிரலில் மேலுக்கு வந்துள்ளது.

பெற்ற தாயை, வளர்த்த தந்தையை, அன்பு பிள்ளைகளை, கை பிடித்த மனைவியை, வாழ்ந்த பூமியை, வணங்கி வழிபட்ட புனித ஸ்தலத்தை என மொத்த வாழ்க்கையையும் இழந்து இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று ஆனபோது உணர்வை இழக்காமல் கேள்வி கேட்டார்கள்.

உரிமை கேட்ட ஹமாஸ் ‘பயங்கரவாதிகள்’ 70 வருடங்களாக மனிதப் படுகொலை செய்து வரும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ‘தற்காப்பு போராளி’. இது தான் அமரிக்காவின் நீதி.

அமரிக்கா தனது வீட்டோ மூலம் போர்க் குற்றவாளி இஸ்ரேலை யாரும் கண்டிக்காமல் பாதுகாத்து வந்தது. இன்று ரஷ்யா தனது வீட்டோவை பயன்படுத்தி ஹமாஸை பயங்கரவாதி என கண்டிக்காமல் பாதுகாத்துள்ளது.

இஸ்ரேலின் மிக முக்கியமான நாளிதழொன்று ” பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை காப்பதில் உலகில் வாழும் மக்களிலே மிகவும் சிறந்த மக்கள்” என ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியுள்ளது.

விடியலை தேடும் ஆன்மாக்களின் முயற்சிகளின் இடுக்குகளில் விடிவெள்ளி தென்படுகிறது. இறைநேசர்களின் மரணம் முற்றுப்புள்ளி அல்ல.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...