புனித ஹஜ் பயணம் 2024: திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தினூடாக பதிவு செய்யலாம்!

Date:

2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்தில்  காணப்படும் விண்ணப்பத்திப்பத்தினூடாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர்களைத் தேர்வு செய்கின்ற நேர்முகத் தேர்வு எதிர்வரும் நவம்பர் 02, 03, 04 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ் குழுவுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

மேற்படி நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படும் முகவர்களின் விபரங்களை திணைக்களம் உத்தியோக பூர்வமாக வெளியிட்டதன் பின்னர், தெரிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களுடன் மாத்திரம் 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ் குழு ஆகியன கேட்டுக் கொள்கின்றது.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தள முகவரியூடாகப் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

https://muslimaffairs.info/hajjapplications_24/create
Z.A.M. பைஸல்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
இலக்கம் 180, டி.பி.ஜயா மாவத்தை
கொழும்பு -10
தொலைபேசி : 0112667909 / 01122667901
Email : director@muslimaffairs.gov.lk

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...