புனித ஹஜ் பயணம் 2024: விசேட அறிவித்தல்!

Date:

2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்திற்குச் சென்று அதில் வினவப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைவாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர்களைத் தேர்வு செய்கின்ற நேர்முகத் தேர்வு எதிர்வரும் நவம்பர் 02,03,04 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

மேற்படி நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படும் முகவர்களின் விபரங்களை திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டதன் பின்னர், தெரிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களுடன் மாத்திரம் 2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ் குழு ஆகியன கேட்டுக் கொள்கின்றது.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தள முகவரியூடாக மாத்திரம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளவும். அதன் இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

https://muslimaffairs.info/hajjapplications_24/create

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...