இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பரீட்சை ஊழியர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
0412 234 134 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது அவசர தொலைபேசி இலக்கமான 117 ஊடாக மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.