புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு !

Date:

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலைமைகளால் சில மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பிலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்தும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...