மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
எனினும், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், தற்போது பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அவர் கூறியுள்ளார்.
எனினும், தமது துறை பாரிய நெருக்கடியில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.