எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்தார்.
காலியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையேற்றத்தினால் தமது துறை பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், மின்சாரம் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சி தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.