மனித கடத்தல் தொடர்பில் 44 முறைப்பாடுகள் மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் கடந்த ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு முழுவதும் மனித கடத்தல் தொடர்பில் 36 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஓமானிலே அதிகளவான மனித கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.