மயிலத்தமடு விவகாரம்: உடனடி தீர்வுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Date:

மயிலத்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில்,  இந்த பிரச்சினை தொடர்பில் நேற்று (15)  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்  விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர்,ஆளுங்கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர்,மகாவலி DG, பொலிஸ்மா அதிபர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர்   கலந்துகொண்டனர்.

விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு என்பன இந்த நாட்டின் முதுகெலும்பாகும். இவை இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும்.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து மட்டக்களப்பு மயிலதமடுவில் விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களிலேயே  விவசாயம்  மேற்கொள்ள மாற்று இட ஒதுக்கீடுகள் வழங்க  அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இவ்வாறு மாற்று இடங்கள் வழங்குவதன் ஊடாக பண்ணையாளர்கள், விவசாயிகள் என இருத்தரபினருடைய பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை கால்நடைகளுக்கு உணவுகளை வழங்க தேவையான உதவி தொகைகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...