மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் வசந்த யாப்பாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற நிலையில் ஒன்றரை மணிநேரம் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
” நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பது மட்டுமன்றி இந்திய கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட கடன்களும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.” என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா,தெரிவித்தார்.