மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது சோலிஹ் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மாலைத்தீவுக்கான இலங்கை தூதுவர் ஆடம் மஸ்னவீ ஜௌஃபர் சாதிக்கை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கை தூதுவர், ஜனாதிபதி முகமது முயீஸ் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்
அத்துடன், மாலைதீவு-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மாலைத்தீவின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை தொடர்ந்து ஆதரவளித்து ஒத்துழைக்கும் என இலங்கை தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.