முழு உலகத்திலும் உள்ள தங்க கட்டிகளை கொண்டு வந்து தந்தாலும் பாலஸ்தீன புனித பூமியை விட்டுக் கொடுக்க மாட்டேன்: தன் பதவி துரப்புக்கு காரணமாக அமைந்த உதுமானிய பேரரசின் கலீஃபா சுல்தான் அப்துல் ஹமீது அவர்களின் துணிச்சலான முடிவு!

Date:

துருக்கி ஷாதுலிய்யா தரீக்கத்தின் ஷேக் அபு ஷாமத் மஹ்மூது அவர்களுக்கு உதுமானிய பேரரசின் கலீஃபா சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் செப்.22.1913 அன்று எழுதிய கடிதம் இது.

இளம் துருக்கியர் (YOUNG TURKS) அமைப்பின் அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களால் நான் கலீஃபா பதவியை விட்டுவிட்டேன். சியோனிச அமைப்பினரின் கோரிக்கையான பாலஸ்தீனத்தில் யூத அரசை நிறுவுவதற்கு நான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இந்தக் குழு வலியுறுத்தியது. நான் இந்த முன்மொழிவை நிராகரித்தேன்.

இதற்குப் பகரமாக 150 மில்லியன் பிரிட்டிஷ் தங்க கட்டிகளை வழங்கி உதுமானியப் பேரரசின் வெளிநாட்டு கடன் முழுவதையும் அடைப்பதாக கூறினார். இதையும் நான் நிராகரித்தேன்.

நான் அவர்களிடம் சொன்னேன்: ‘நீங்கள் 150 மில்லியன் பிரிட்டிஷ் தங்கம் அல்ல, உலகம் முழுவதிலும் உள்ள தங்கம் அனைத்தையும் வழங்கினாலும் நான் உங்களுடன் உடன்பட மாட்டேன்.

நான் 30 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம் உம்மத்துக்கு சேவை செய்துள்ளேன். நான் என் முன்னோர்களின் வழியை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன்.
முடிவான எனது இந்த பதிலைத் தொடர்ந்து, அவர்கள் என்னை பதவி நீக்கம் செய்வதை ஒப்புக்கொண்டு என்னை தெசலோனிகிக்கு அனுப்பினர். உதுமானிய அரசு மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் பாலஸ்தீன நிலங்களில் ஒரு புதிய அரசை நிறுவுவதை நான் ஒருபோதும் ஏற்கவில்லை” என்று கலீஃபா சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...

மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு...

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...