வெலிகமயில் புனித மீலாத் பெருவிழா: வெளிநாட்டவர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Date:

18 ஆவது வருடமாக இடம்பெற்ற புனித மீலாதுந் நபி பெருவிழா தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஆன்மீகத் தலைவர்  இமாம், ஷெய்ஹ், ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) தலைமையில் கடந்த 29  ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெலிகம பைத்துல் பரக்காஹ் இல்லத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஏராளமான நபி நேசர்கள் உட்பட இந்தியா, டுபாய், கட்டார், குவைத், மலேசியா, சிங்கப்பூர், சவூதி, லண்டன் உட்பட பல நாடுகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் (ஜம்இய்யதுல்) உலமா பொதுச்செயலாளர், டாக்டர் மௌலவி அன்வர் பாதுஷா (உலவி), சென்னை சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் டாக்டர் ஷெகு அப்துல்லாஹ் ஜமாலி, மௌலவி முஸ்தபா (மஸ்லாஹி) ஆகியோர் நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.

ஹொங்கொங் அஹ்மத் ஸாலிஹ் பாஹீமி மற்றும் மௌலவி பைஸல் காரி ஆகியோரின் நபி புகழ் கஸீதாக்களும் விழாவில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...