நிலவும் சீரற்ற காலநிலையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் டெங்கு உள்ளிட்ட தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடிநீரை சுத்திகரிக்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்க்க பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து உணவுக் கடைகளையும் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறோம்.
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அவர்களின் குடியிருப்பு வளாகங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்” என்றும் உபுல் ரோஹன பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.