ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Date:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பயண நேர அட்டவணையில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் ஆராயும் வகையில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் இன்று காலை 9.30 அளவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான போக்குவரத்து தாமதம் காரணமாக நாட்டின் தேசிய விமான சேவைக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவது குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல விமான போக்குவரத்து இரத்து செய்யப்பட்டதுடன், விமான பயண நேர அட்டவணையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இரு விமானங்கள் நேற்றைய தினம் திடீரென இரத்து செய்யப்பட்டன.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேபாளம் மற்றும் மும்பை ஆகியவற்றுக்கு பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானங்களே  இரத்து செய்யப்பட்டன.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...