2024 வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இராஜாங்க அமைச்சர்

Date:

எரிபொருள் தட்டுப்பாடுக்கு இடமில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்..

2024 ஜூன் வரை எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டெண்டர்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அதுவரை தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சீனாவின் சினோபெக் நிறுவனத்திடம் எரிபொருள் விநியோகத்தை ஒப்படைப்பதன் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...