ரூ.4 பில்.கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கையும் சீன வங்கி இணக்கம்!

Date:

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் சீனாவின் எக்சிம் வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன.

நீண்ட கால கடன்களை மீளச் செலுத்துவதற்கான இலங்கையின் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இந்த உடன்பாடு உதவியாக இருக்குமென நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொதுக்கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான சீன எக்சிம் வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கடன் பெறுநர்கள்,வணிகக் கடன் வழங்குநர் குழுவுடன் சீன வங்கி தொடர்ந்தும் உறவைப் பேணுமென இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது.

அந்த ஒப்புதலின் பின்னர், இரண்டாவது தவணைக் கொடுப்பனவான 334 மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்குமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...