Marylebone Cricket Club (MCC) உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே குழுவின் உறுப்பினராக இருந்த குமார சங்கக்காரா, தற்போது தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக் கேட்டிங் இக்குழுவின் தலைவராக இதுவரை செயற்பட்டிருந்தார்.
குழுவில் குமார தர்மசேன, சௌரவ் கங்குலி, ஜூலன் கோஸ்வாமி, ஹீதர் நைட், சுசி பேட்ஸ், கிளேர் கானர், ஜஸ்டின் லாங்கர், இயோன் மோர்கன், ரமீஸ் ராஜா, கிரேம் ஸ்மித் மற்றும் ரிக்கி ஸ்கெரிட் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த குழு சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதுடன், விளையாட்டில் நிலவும் பிரச்சினைகளை விவாதிக்க ஆண்டுக்கு இரண்டு முறை கூடும்.
குமார சங்கக்கார 2019ஆம் ஆண்டில் MCC இன் முதல் பிரிட்டிஷ் அல்லாத தலைவர் ஆனார். இரண்டு வருடங்கள் பதவியை வகித்த அவர் தற்போது மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.