MCC உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக குமார சங்கக்கார நியமனம்

Date:

Marylebone Cricket Club (MCC) உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே குழுவின் உறுப்பினராக இருந்த குமார சங்கக்காரா, தற்போது தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக் கேட்டிங் இக்குழுவின் தலைவராக இதுவரை செயற்பட்டிருந்தார்.

குழுவில் குமார தர்மசேன, சௌரவ் கங்குலி, ஜூலன் கோஸ்வாமி, ஹீதர் நைட், சுசி பேட்ஸ், கிளேர் கானர், ஜஸ்டின் லாங்கர், இயோன் மோர்கன், ரமீஸ் ராஜா, கிரேம் ஸ்மித் மற்றும் ரிக்கி ஸ்கெரிட் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழு சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதுடன்,  விளையாட்டில் நிலவும் பிரச்சினைகளை விவாதிக்க ஆண்டுக்கு இரண்டு முறை கூடும்.

குமார சங்கக்கார 2019ஆம் ஆண்டில் MCC இன் முதல் பிரிட்டிஷ் அல்லாத தலைவர் ஆனார். இரண்டு வருடங்கள் பதவியை வகித்த அவர் தற்போது மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...