சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு! மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவின் உத்தரவிற்கமைய திருத்தங்களுக்கு உட்பட்டு குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்படும் பின்புலத்திலேயே அரசாங்கம் இவற்றை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றது.