இஸ்ரேல் – பலஸ்தீன மோதலுக்கு மத்தியில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் கண்டறியும் வகையில் மேற்கு காசா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தூதுவர் தமது விஜயத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு தரப்பினர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய தமது விஜயத்தை நிறுத்திவிட்டு திரும்ப நேரிட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
போர் சூழலுக்கு மத்தியில் இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இலங்கையர்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் நேற்றைய தினம் ( 11) இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உள்ளிட்ட பிரதிநிதிகள் மேற்கு காசா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தூதுவர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.
இந்த பின்னணியில், காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் உரிய தகவல்களை வழங்க முடியாதுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.