அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் முப்தி ரிஸ்வி அவர்களுக்கும் இலங்கை மாணவர் ஒன்றியத்துக்குமிடையிலான ஒரு சினேகபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது அல்ஹாபிழ் ஹூசைன் அஸ்ஹரி அவர்களின் அழகிய கிராஅத்தினுடன் ஆரம்பமான இந்நிகழ்வு வெளிநாட்டு மாணவர்களின் விடுதியின் ஒரு பகுதியில் மிக சிறப்பாக ஆரம்பமானது.
ஒன்றியத்தின் தலைவர் அஷ்ஷெய்ஹ் ஷாஹுல் ஹமீத் அவர்களின் வரவேற்புரையும் அதனைத்தொடர்ந்து ஜம்இய்யாவின் பத்வா குழுவுக்கு பொறுப்பானவரும் இலங்கையின் மூத்த ஆலிம்களில் ஒருவருமான அஷ்ஷெய்க் மௌலவி இல்யாஸ் அவர்களும் இந்த எமது கலந்துரையாடலில் பங்குபற்றி அழகான அறிவுரைகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து எமக்கு பல உபதேசங்களை இந்நிகழ்வின் முக்கியஸ்தரான அஷ்ஷெய்ஹ் முப்தி ரிஸ்வி அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் ஜம்இய்யாவின் வேலைத்திட்டங்கள், அதனுடைய சேவைகள், எமது மாணவர்களிடம் ஜம்இய்யா என்ன எதிர்பார்க்கிறது போன்ற விடயங்களை கலந்துரையாடப்பட்டது.
மேலும் கேள்வி பதிலுக்கான நேரமும் வழங்கப்பட்டது அதில் ஜம்இய்யாவின் முன்னேற்றத்துக்கு எமது மாணவர்களின் கருத்துக்களையும் செவிமடுத்தார் அதுமட்டுமல்லாது மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் கேள்விகளுக்குமான பதில்களையும் அவர்கள் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் வழங்கினார்கள்.
இறுதியாக அஷ்ஷெய்ஹ் முப்தி ரிஸ்வி அவர்கள் சமூகம் தந்த அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் எமது ஒன்றியத்துக்கு ஜம்இய்யாவினால் எழுதப்பட்ட பல நூல்களை பரிசாக வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களான:
1- ஷா{ஹல் ஹமீத் (கலாநிதி ஆய்வாளர்).
2- முஹம்மத் ஷிபான் (கலாநிதி ஆய்வாளர்).
3- கஸீர் பிச்சைத்தம்பி (கலாநிதி ஆய்வாளர்).
4-முஹம்மத் ரிஸ்னி (கலாநிதி ஆய்வாளர்).
5- ஹிப்னாஸ் அஹ்மத் (கலாநிதி ஆய்வாளர்).
6-முஹம்மத் ரிக்ஸி (முதுமாணி ஆய்வாளர்)
7-முஹம்மத் {ஹசைன் (முதுமாணி ஆய்வாளர்)
8- முஹம்மத் பாஸில் (முதுமானி மாணவர்)
9-பனூஸ் முபாறக் (முதுமானி மாணவர்)
10- அப்துல் ஹக் (உஸூலுத்தீன்)
11- அஹ்மத் ஸஹீல் (உஸூலுத்தீன்)
12- முஹம்மத் ஷாஹித் (உஸூலுத்தீன்)
13- அஹ்மத் ஸஹ்ரான் (மஃஹத்)
கலந்துகொண்ட இந்த அனைவருக்கும் முப்தி அவர்கள் நன்றிகளை தெரிவித்தார்கள்.




