சிறுவர் தினத்தை முன்னிட்டு கரம்பை இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் “எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்” எனும் மகுட வாசகத்தின் கீழ் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று (2) கரம்பை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நாயக்கர்செனை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கரம்பை கிராம அலுவலர் NM.NAWFAL அவர்களும், விஷேட அதிதியாக நாயக்கர்செனை பாடசாலையின் அதிபர் V. Ramanathan அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் கரம்பை சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் V.Rasalingam அவர்கள், கரம்பை இளைஞர் கழக உறுப்பினர்கள், பாலர் பாடசாலையின் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இச் சிறுவர் தின நிகழ்வின் போது பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டதோடு இறுதியில் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
கரம்பை இளைஞர் கழகம்,