கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உலகின் மிகப் பெரிய திறந்த சிறைச்சாலையாக காஸா இருந்து வரும் நிலையில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர்ப்பிரகடனம் அவர்களது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
ஹமாஸின் தூபான் அல் அக்ஸா தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக இஸ்ரேல் அவர்களுக்கான மின்சாரத்தைத் துண்டித்து விட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மொத்தமான துண்டிப்பை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
காஸாவுக்கான உணவு, நீர், எரிபொருள் விநியோகம் அனைத்தையும் துண்டித்து விடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் காஸாவில் வசிக்கும் 23 இலட்சம் திறந்த சிறைச்சாவை மக்களும் உணவு நீர் மற்றும் மின்சாரம் இன்றி தவிக்கவிடப்படவுள்ளனர்.