கொழும்பில் குண்டுத் தாக்குதல் தொடர்பாக உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை!

Date:

கொழும்பில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதேநேரம் சிறைக் கைதி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்  உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் 7 இடங்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக  ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

கைதி ஒருவர் கொழும்பின் பல பகுதிகளில் குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக  கடிதம் ஒன்றை விட்டுச்சென்றதாகவும் அதில் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும்  இதுவரையில் அவ்விடயம் தொடர்பில் எந்த தகவல்களையும் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தவில்லை.

கைதி வழங்கிய தகவலுக்கு அமைவாகவே தற்போது உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் இந்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்த தகவல்கள் வெளிப்படுத்தப்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...