தரக்குறைவான மருந்துகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
“தரக்குறைவான மருந்துகளை பாவிப்பதனால் நோய் நிலைமைகள் மோசமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இலவச சுகாதார சேவையில் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையானது மோசடிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்போதைய சுகாதார அமைச்சரின் காலம் இந்த நாட்டில் சுகாதார சேவையில் மிகவும் வினைத்திறன் அற்ற காலகட்டம்“ எனவும் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.