தரம் 5 மாணவி துஷ்பிரயோகம் – பிரதி அதிபர் கைது!

Date:

5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி, பொலிஸார் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி குறித்த பாடசாலையில் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபரால் மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (16) கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமியை ஆஜர்படுத்திய பின்னர் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

59 வயதான சந்தேகநபரான பிரதி அதிபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...