துருக்கி தனது போர் கப்பலை காசாவுக்கு தயார் நிலையில் வைத்துள்ளது: பலஸ்தீனத்திற்கு முழு ஆதரவு?

Date:

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடுமையான இடைவிடாத தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், காசாவுக்கு தனது போர் கப்பலை அனுப்ப துருக்கி யோசித்து வருகிறது.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, யூதர்களை தேடி தேடி வேட்டையாடியது. இதிலிருந்து தப்பியவர்கள் கப்பலில் பலஸ்தீனத்திற்கு வந்தடைந்தார்கள்.

இப்படி வரும்போது அவர்கள் பேனர் ஒன்றை கையில் ஏந்தியிருந்தார்கள். அதில், “ஜெர்மனி எங்கள் குடும்பங்களை அழித்துவிட்டது. நீங்கள் எங்கள் நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள்” என்று எழுதப்பட்டிருந்து.

இதான் யூதர்கள் பலஸ்தீனத்திற்குள் நுழைந்த வரலாறு. இவர்களுடைய மோசமான நிலையை பார்த்த ஐநா சபை 1947ம் ஆண்டு பலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது.

அதன் பின்னர் 1949 முதல் 1967ம் ஆண்டு வரை இஸ்ரேல் பலஸ்தீனத்தை மிக தீவிரமாக ஆக்கிரமிக்க தொடங்கியது.

தற்போது மிக மிக சொச்சமான அளவில் உள்ள நிலப்பரப்பில்தான் பலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சொச்சமான நிலப்பரப்பில் காசாவும் ஒன்று.

சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட இந்த துண்டு நிலத்தில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.

இந்த இடத்தை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால் பலஸ்தீனிய போராளிகள் இதனை தடுத்து வருகின்றனர்.

எனவே இந்த துண்டு நிலத்தை இஸ்ரேல் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறது.

இதற்கு எதிராக குரல் கொடுத்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் இந்த அமைப்புகள் வேறு வழியின்றி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தன.

அப்படிதான் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கின் இரும்புக்கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அவுதும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இதனையடுத்து இஸ்ரேல் 7வது நாளாகா காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று சிரியாவின் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசியிருப்பது மத்திய கிழக்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தேவையில்லாமல் மற்ற நாடுகளையும் சண்டைக்கு இழுக்கும் செயல் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர் கப்பல் ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை’ காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது.

இது தவிர, வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் “உங்களைத் தற்காத்துக் கொள்ள தேவையான பலத்தை நீங்களே கொண்டிருக்கலாம்.

ஆனால், அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாக இருக்க வேண்டியது இல்லை. நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் இருப்போம்” என்று இஸ்ரேலுக்கு ஆதரவு கூறியிருந்தார்.

இதனையடுத்து ‘R08 குயின் எலிசபெத்’ (R08 Queen Elizabeth) என்ற 60 விமானங்களை தாங்கக் கூடிய போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப முடிவெடுத்துள்ளது.

மற்றொருபுறம் அமெரிக்காவின் வெளிநாடு அவசர சிறப்பு படை (Foreign Emergency Special Team) டெல் அவிவ் வந்து சேர்ந்திருக்கிறது.

இந்நிலையில்தான் துருக்கி தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே அனுப்ப யோசித்து வருகிறது.

டிசிஜி அனடோலு (எல்-400) என்று அழைக்கப்படும் இந்த போர்க்கப்பல் போர் விமானங்களை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டனின் போர்க்கப்பல்களுடன் இதை ஒப்பிடுகையில் இதனுடைய திறன் குறைவுதான் என்றாலும், இத்தனை பெரிய நாடுகளை எதிர்த்து துருக்கி எனும் சிறிய நாடு போர்க்கப்பலை அனுப்புவது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...