பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அடுத்த வருடம் முதல் ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி செய்யப்படும் எனவும் அதற்காக செலவிடப்படும் தொகை அறுபது மில்லியன் ரூபாவை தாண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
எம்.பி.க்களின் வயது வரம்பில் ஏற்பட்ட மாற்றம், சமூக பாதுகாப்பு வரி திருத்தங்கள் காரணமாக வரித் தொகையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக காப்புறுதித் தொகை அறுபது மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.