பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்…!

Date:

கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள போதிலும் அதிகாரிகள் தமது கொடுப்பனவுகளை அதிகரிக்கத் தவறியமை தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செலவினங்களின் அதிகரிப்புக்கு இணையாக போக்குவரத்து கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாததால், பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிடத்தக்க நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று சேவையில் இருந்து விலகினாலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக வைத்தியசாலை ஆகியவற்றில் செயற்பாடுகள் பாதிக்கப்படாது என சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...