மரத்துடன் மோதிய பஸ்! மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!

Date:

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளை மரதன்கடவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த பலரை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு வைத்தியசாலை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...

மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு...

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...