வவுனியாவில் கோர விபத்து: விசேட அதிரடிப்படையின் இருவர் பலி!

Date:

வவுனியா வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த வீட்டுமதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதன் பாேது ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுள் இருவர் ஆபத்தான நிலையில்   அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பாெலிஸார் மேற்காெண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...