இரண்டு அமைச்சுகளின் செயலாளர் நியமனம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபால நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மாபா பத்திரன கடந்த 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 31 வரை ஒரு மாத காலத்திற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக பணியாற்றவுள்ளார்.
அத்துடன், வைத்தியர் பாலித குணரத்ன மஹிபால, கடந்த 20 ஆம் திகதி முதல் ஒருவருட காலத்திற்கு சுகாதார அமைச்சின் செயலாளராக தனது பதவி வகிக்கவுள்ளார்.