இலங்கை மின்சார சபைக்கு 08 மாதங்களில் 8 கோடி ரூபாய் நிதி இழப்பு!

Date:

சட்டவிரோத மின்சாரம் இணைப்பு காரணமாக கடந்த 08 மாதங்களில் சுமார் 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

சிலர் மின்சார மானியை மாற்றுதல் மற்றும், பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக  மின்சாரத்தை பெற்றுக் கொள்வதன் ஊடாக குறித்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபை குறிப்பிடுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இவ்வாறான மின்சார கொள்முதலால் சபைக்கு ஏழு கோடியே தொண்ணூறு லட்சத்து எழுபத்து நான்காயிரத்து எண்ணூற்று ஐம்பத்தேழு ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த எட்டு மாதங்களில் மின்சார மானி மாற்றங்கள் தொடர்பாக 1,041 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏழு கோடியே அறுபத்து நான்கு இலட்சத்து இருபத்தி ஏழாயிரத்து அறுநூற்று நாற்பது ஒன்பது ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டமை தொடர்பில் 81 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் இருபத்தி ஆறு இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து இருநூற்று ஏழு ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவர்களிடமிருந்து முப்பத்தாறு இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரத்து ஐநூறு ரூபா அறவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...