‘இவர்கள் எப்போது போர்க் கதைகளை முடிப்பார்கள்; பலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும்; போப் பிரான்சிஸ் வேதனை

Date:

பலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே அங்கு நடந்துவரும் போருக்கு முடிவு காணமுடியும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் நகரம் தற்போது இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஐ.நா நிர்வாகிக்கும் வகையில் அந்நகருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் புனித பூமியில் நடக்கும் போர் என்னை பயமுறுத்துகிறது. இவர்கள் எப்போது போர் கதைகளை முடிப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்.

இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் ஒன்றாக வாழ வேண்டிய இரு நாட்டு மக்கள். பலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.  ஒஸ்லோ ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே சமாதானத்தை முன்னெடுப்பதையும், மேற்குக் கரையின் பெரும்பகுதியை பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை நோக்கமாகவும் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் ஒஸ்லோ ஒப்பந்தம். இதில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் இரு தரப்புக்கு இடையேயான அமைதி, சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், மீண்டும் வன்முறை கோரத் தாண்டவம் ஆடத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் துபாயி ல் நடை பெற உள்ள ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க போவதாக தெரிவித்த போப், உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் தலைவர்களை வலியுறுத்த போவதாக தெரிவித்தார்.

ஐ.நா காலநிலை மாநாட்டில் போப் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...