இஸ்ரேல் ஹமாஸ் போரில் இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் யடவர பண்டாரவின் பூதவுடல் இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இஸ்ரேலிலிருந்து டுபாய் வழியாக, டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று காலை 8.37ற்கு நாட்டிற்கு பூதவுடல் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விமான நிலையத்திற்கு சமூகமளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுஜித் யடவர பண்டாரவின் இறுதிக் கிரியைகள், வென்னப்புவ பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.