இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிப்பு; காஸாவில் தொடரும் மனிதாபிமான உதவிகள்

Date:

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் ஏழாவது நாளாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்ததுக்கான ஒப்பந்தம் நிறைவடைவதற்கான சில நிமிடங்களுக்கு முன்னதாக போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று இருதரப்பும் தெரிவித்துள்ளது.

பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான மத்தியஸ்தர்களின் தொடர் செயல்பாட்டு முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களின்படி போர் இடைநிறுத்தம் தொடர்கிறது என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஏழாவது நாளைக்கு போர் நிறுத்தம் நீடிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று ஹமாஸ் தரப்பும் தெரிவித்துள்ளது.

இன்றுடன் போர் நிறுத்தம் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால், போர் நிறுத்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது குறித்து கத்தாரில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் உயர் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வந்ததன் பலனாகவே இன்று மீணடும் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் எட்டு வாரங்களுக்கு பின்னர் இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...