உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியால் இரண்டு தற்கொலைகள் பதிவு

Date:

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதால் இரண்டு தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் முழுவதும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை, இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதற்கிடையே இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த தேவ் ராஜன் தாஸ் (23) என்ற ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதேபோல் மேற்கு வங்காள மாநிலம் பெங்குரா பகுதியை சேர்ந்த ராகுல் லோகர் (23) என்ற ரசிகரும் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் போட்டி முடிந்த அன்று இரவு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் தோல்வி இரண்டு இளம் உயிர்களை பறித்துள்ளது.

ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...