காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் கால் நடையாக வெளியேறியுள்ளனர்.
ஒரு மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டதால் நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மருத்தவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் இலக்குகளை மையமாக வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இஸ்ரேல் ராணுவம் அல் ஷிஃபா மருத்துவமனையை ஹமாஸ் குழுவினர் பதுங்கிடமாக பயன்படுத்தி வருவதாகவும் மருத்துவமனைக்கு கீழ் சுரங்கப்பாதைகளை அமைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டி வந்தது. நேற்று மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைக்குள் இருந்த ஹமாஸ் கட்டளை மையத்தை கண்டுப்பிடித்தது.
ஆபத்தான நிலையில் உள்ள 300 நோயாளிகள் இன்னும் அல் ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதும் காசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டவர்களை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இலக்குகளைத் தேடும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் நேற்றும் தொடர்ந்ததாக அல் ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு பாதுகாப்பான வழியை திறந்து வைக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்த கோரிக்கைக்கு இஸ்ரேல் இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், வடக்கு காசா பகுதியில் உள்ள “ஜபாலியா” நகரில் இரண்டு வெடிப்பு சம்பவங்களில் 80 பேர் உயிரிழந்ததாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12300 ஆக உயர்ந்துள்ளது.
இடிபாடுகளுக்குள் 2000க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
She was undergoing surgery before the Israelites bombed Al shifa hospital in Gaza, Palestine. pic.twitter.com/Qws8z9diMZ
— Nigeriansunni(Qur'an) (@Nigeriansunni) November 19, 2023