கட்டணம் செலுத்தாமையால் மஹிந்தவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்றாலும் பின்னர் நேற்று மின்சார சபையினால் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்கு பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என அண்மையில் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை வீரகெட்டியவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றதாகவும் அதற்காக பெறப்பட்ட மின்சாரத்திற்கு 2,682,246.57 ரூபாய் செலுத்தவில்லை எனவும் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...