காசாவில் 5ஆவது நாளாக போர் நிறுத்தம்: மேலும் 12 பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

Date:

நேற்று 5-வது நாளாக  மேலும் 12 பணயக் கைதிகளை  ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போரை தொடங்கியது.

காசா மீது மும்முனை தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த பகுதி நிர்மூலமாகி உள்ளது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் 4 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

கடந்த 24  ஆம் திகதி போர் நிறுத்தம் தொடங்கிய நிலையில் இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து பலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு விடுவித்தது. இதற்கிடையே போர் நிறுத்தம் மேலும் 2 நாட்கள் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 5-வது நாளாக  மேலும் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.

10 இஸ்ரேலியர்கள், 2 வெளிநாட்டினர் விடுவிக்கப்பட்டனர். அவர்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் ஒப்படைத்தனர்.

இதேபோல் நேற்று இஸ்ரேல் சிறைகளில் 30 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 6-வது நாளாக இன்று மேலும் பணயக் கைதிகளை விடுவிக்கப்பட உள்ளனர். இதற்கான பெயர் பட்டியல் இஸ்ரேல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக சிறைகளில் உள்ள பலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...