நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

Date:

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சென்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் 4 பந்துகளில் 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் வெற்றி இலக்கை 23 ஓவர்கள் 2 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து கடந்தது.

இந்தத் தோல்விக்குப் பின்னர், இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் நெதர்லாந்து அணியை மாத்திரம் பின்தள்ளி 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பில் இலங்கை அணி 9 போட்டிகளில் களமிறங்கி இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

Popular

More like this
Related

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...