தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ரம்யா லங்கா அறக்கட்டளை, புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணை அமைப்பாளர்களாக உள்ளன.
நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்ய அனைவரையும் அழைக்கிறோம்.