நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை: இன்றைய வானிலை

Date:

மஹாஓயா பள்ளத்தாக்கின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிவப்பு நிற வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அளவ்வ, வென்னப்பு, மீகமுவ, கடான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கக்கூடும் என்பதன் காரணமாக அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படுவதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கேகாலை, கலிகமுவ மற்றும் அரநாயக்க ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்சரிவு அபாயம் காரணமாக புனித ஜோசப் கனிஷ்ட பெண்கள் கல்லூரி மற்றும் புனித மரியாள் தமிழ் கல்லூரி இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பல பகுதிகளில் நேற்று இரவு பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால், மலையக இரயில் மார்க்கத்தில் பயணிக்கும் இரயில் சேவைகள் மீண்டும் தடைப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...