பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் நேரம் வந்துவிட்டது-ஸ்பெயின் பிரதமர்!

Date:

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான மோதலை முன்னிட்டு, எகிப்தின் ரபா எல்லை பகுதியில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ ஆகியோர் கூட்டாக நேற்று(24) பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

இதில் பேசிய சான்செஸ், சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைவரும் பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அதுபோன்று இணையவில்லை என்றால், ஸ்பெயின் தனது சொந்த முடிவை எடுக்கும் என்று பேசினார்.

இதனை தொடர்ந்து பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ, பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவது பற்றி எதுவும் கூறாதபோதும், அவர் பேசும்போது, வன்முறையை நிறுத்த வேண்டும், பணய கைதிகளை விடுவிக்க வேண்டும், உதவி பொருட்கள் காசாவுக்கு சென்று சேர செய்ய வேண்டும். முதலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என பேசினார்.

நிரந்தர போர்நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதற்கான தேவை மற்றும் நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

பொதுமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும், நிறைய மக்கள் உயிரிழந்து விட்டனர், காஸாவை அழிப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது, ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது என்பதனையும் நாங்கள் ஏற்க முடியாது என்று அவர் பேசினார்.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...