புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு MRCA/02/20/08/2023 ஆம் இலக்க 2023.11.06 ஆம் திகதி கடிதம் மூலம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், மதஸ்தலங்களுடன் இயங்கும் கல்வி நிலையங்களுக்கு சூரிய மின் சக்தி கட்டமைப்புக்களை மேற்கொள்வதற்கு தகவல்களைக் கோரியுள்ளது.
குறிப்பாக பள்ளிவாசல்களுடன் இணைந்து செயற்படும் அரபிக் கல்லூரிகள், மத்ரஸாக்கள் மற்றும் ஏனைய கல்வி நிலையங்களுக்கு சூரிய மின் சக்தி கட்டமைப்பை பெற்றுக் கொள்வதற்கு சரியான விபரங்களை அமைச்சுக்கு வழங்க வேண்டியுள்ளதால் பள்ளிவாசல்களுடன் இணைந்து அரபுக் கல்லூரிகள், மத்ரஸாக்கள் மற்றும் ஏனைய கல்வி நிலையங்கள் இயங்குமாயின் அவற்றின் தகவல்களை எதிர் வரும் 2023.11.27ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தகவல்களைப் பெற்று திணைக்களத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு சகல மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.