மேன் முறையீட்டு நீதிமன்ற ஷண்முகா அபாயா வழக்கு: பாடசாலைகளில் அபாயா ஆடை அணியத் தடையில்லை என பிரதிவாதிகள் எழுத்து மூலம் ஏற்பு!

Date:

ஷண்முகா அபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த எழுத்து மூல (Writ) வழக்கு (07.11.2023) முடிவுக்கு வந்துள்ளது.

“தனது கலாச்சார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்” என, ஆசிரியை பஹ்மிதா, மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்து மூல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அதேநேரம், தனது அரச கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற வேளை அதனைத் தடுத்தமைக்கு எதிராக, ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றையும், திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

பாடசாலை அதிபர் சமூகமும், “ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு அபாயா அணிந்து வரத் தடையில்லை” என்ற உத்தரவாதத்தை தந்ததைத் தொடர்ந்து, அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சமரச அடிப்படையில் முடிவுக்கு வந்ததிருந்தது.

எனினும், நீதவான் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின் பிரகாரம், குறித்த பாடசாலையினை மாத்திரமே இவ்விவகாரம் கட்டுப்படுத்துவதாக இருந்தது.

ஆனால், கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பிலான வழக்கில், பிரதி வாதிகளான கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஷண்முகா அதிபர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், அரசைப் பிரதி நிதித்துவப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் என்பன, “பாடசாலைகளில் அபாயா அணிந்து செல்வதில் எந்தத் தடையும் இல்லை” என்ற உத்தரவாத்தினை எழுத்து மூலம் தந்ததை அடுத்து, இவ்வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த முடிவின் பிரகாரம், “இலங்கையில் இருக்கும் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் அபாயா அணிந்து செல்வதற்குத் தடையில்லை” என்பது, குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

இச்சிறப்பு வழக்கில், சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரேயா, குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி ராஸி முஹம்மத் மற்றும் சட்டத்தரணி ருடானி ஸாஹிர் ஆகியோர் (07.11.2023) ஆஜராகி இருந்தனர்.

இவ்வழக்கு விவகாரம் சிறப்பாக வெற்றியடையும் வரை, பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவாக, “குரல்கள் இயக்கம்” (Voices Movement) ஆரம்பம் முதல் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ. ஏ. காதிர் கான் – ( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...