ராஜபக்ஷ குடும்பத்தின் குடியுரிமையை பறிக்க கையெழுத்து வேட்டையை ஆரம்பித்த சஜித் அணி!

Date:

பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ராஜபக்சர்களின் குடியுரிமையை பறிக்கும் வகையில்  ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்தது.

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (23) பொது மக்களிடம் கையெழுத்து திரட்டும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்தது.

இவர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்யுமாறும், இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

‘நீதிக்கான மக்கள் ஆணையைக் கட்டியெழுப்புவோம்‘ எனும் தொனிப்பொருளில் கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் சமய தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டு தங்களின் கையொப்பங்களை பதிவிட்டனர்.

220 இலட்சம் மக்களும் வீதிக்கு இறங்கி இந்த மனுவில் கையொப்பமிட்டு,’ராஜபக்சர்களைப் பாதுகாக்காமல் அவர்களின் குடியுரிமைகளை சட்டப்பூர்வமாக இரத்து செய்ய முன்வர வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

 

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...